12ஆவது மலேசியத் திட்டம்: மலேசியாவை வருங்காலத் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பது அவசியம்

கோவிட் தொற்றுக் காரணத்தினால் அரசின் நிதி நிலைமை வரையறுக்கப்பட்டது மட்டுமின்றி நிதி நிலைத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் 2ஆவது நிதி அமைச்சர், டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார். அரசின் கடன் தொகை தற்போது வெ.95,800 கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.2விழுக்காடு) உள்ளது. இதில் அரசு உத்தரவாதமளித்த வெ.30,000 கோடியும் அடங்கும். இதில் ஒவ்வோர் ஆண்டும் சட்டரீதியானக் கடன் வரம்புகளை உயர்த்தாமல் எவ்வாறு இத்தொகையை வரும் 5 ஆண்டுகளுக்கு அரசு நிர்வகிக்கக்கூடும் என்றே தெரியவில்லை. அதனால் நாட்டு நிர்வாகத்தின் நிதி நிலைமை மேலும் மோசமடையும் அளவுக்குக் கடன் தொகை மற்றும் பொறுப்புகள் உயராமல் இருப்பதற்கு அரசு எப்போதும் வெளிப்படையான நடைமுறையில் இருக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் ஜொஹாரி அப்துல் கானி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 7 =