பிகேஆர் உதவித்தலைவர் ஸூரைடா கமாருடின் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் தாங்களும் கட்சியை விட்டு விலகவுள்ளதாக பினாங்கிலுள்ள 13 கிளைகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
“வெளிப்படையாக கட்சியின் விதிமுறைகளை பலர் மீறியுள்ள வேளையிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸூரைடா மீது மட்டும் ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுப்பதை கண்டு நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம்” என்று பினாங்கு தேசிய ஒருமைப்பாட்டு செயலாக்க சங்கத்தின் தலைவர் ஷாஹ்ருடின் முகம்மது ஷாரிஃப் கூறினார்.
ஸூரைடாவிற்கான தங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக பினாங்கு பிகேஆரைச் சேர்ந்த 250 உறுப்பினர்களுடனும் 15 அரசு சாரா அமைப்புகளுடனும் பினாங்கு பிகேஆர் அலுவலகத்திற்கு முன்னர் ஷாஹ்ருடின் அமைதியான முறையில் கூறினார்.