10 இலட்சம் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய உத்தரவு

  Pic : file

  கோவிட்-19 தாக்கத்தைத் தொடர்ந்து நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (சிஎம்சிஓ) விதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர்.தனியார், அரசு துறைகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்கள் நாளை வியாழக்கிழமை முதல் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
  சிலாங்கூர், சபா, கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் ஆகிய மாநிலங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் சிஎம்சிஓ அமல்படுத்தப் பட்டுள்ளது.
  தொழில்துறைகளில் உள்ள சுமார் 8 லட்சம் ஊழியர்களும் அரசு சேவையில் உள்ள சுமார் 2 லட்சம் ஊழியர்களும் இதில் அடங்குவர் என அவர் சொன்னார்.
  இந்த பிரிவுகளில் உள்ளடங்காத சிலர் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இந்தப் பிரிவினர் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
  இந்தப் பரிசோதனைக்கான செலவுகளை சொக்சோ ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  3 × 1 =