1 கோடியே 84 லட்சத்தை கடந்த கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை – அப்டேட்ஸ்

0

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 60 லட்சத்து 72 ஆயிரத்து 489 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 732 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர்உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 48,61,796பிரேசில் – 27,51,665இந்தியா –  18,03,695  ரஷியா – 8,56,264தென் ஆப்பிரிக்கா – 5,16,862மெக்சிகோ – 4,39,046பெரு – 4,33,100சிலி – 3,61,493ஸ்பெயின் – 3,44,134கொலம்பியா – 3,27,850ஈரான் – 3,12,035இங்கிலாந்து – 3,05,623

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 7 =