1எம்டிபி ஆவணங்களை அழித்து சல்லடையாக்க உத்தரவு

கடந்தாண்டு பொதுத்தேர்தல் நடப்பதற்கு முன்பு 1எம்டிபி தொடர்பான ஆவணங்கள் உட்பட பலவற்றை சல்லடையாக்குமாறு நஜிப் அலுவலகத்தின் தலைமை ஊழியர் அப்துல் அஸிஸ் காசிம் உத்தரவிட்டதாக நேற்று அவரது சிறப்பு அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார்.
கடந்த மே 9 பொதுத்தேர்தலுக்கு முன்பு பிரதமர் இலாகாவின் அதிகாரிகளுக்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது என்று அம்ஹாரி எபென்டி நஸாருடின் நேற்று 10ஆவது நாளாக நடந்த நஜிப் வழக்கு விசாரணையில் கூறினார்.
சில முக்கியமான கோப்புகளை மட்டும் வைத்திருக்க வேண்டும். அவை பின்பு பயன்படுத்தப்படலாம். மற்றவை அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்று எங்களுக்கு ஆணையிடப்பட்டது.
நான் நஜிப்புடன் அவரது சமூக வலைத்தள பிரசாரத்தில் மிகத் தீவிரமாக இருந்தேன். அதனால் சில ஆவணங்களை நான் சல்லடை
யாக்க மறந்து விட்டேன் என்றார் அவர். அஸிஸ் இந்த உத்தரவை வழங்கிய நேரத்தில் வர்த்தகக் கோடீஸ்வரர் ஜோலோவிடமிருந்தும் இதே உத்தரவு வந்ததாகவும் அவர் சொன்னார்.
கோத்தா டாமன்சாராவில் உள்ள அவரது இல்லத்திலும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள எனது உறவினரின் அடுக்குமாடி இல்லத்திலும் இந்த ஆவணங்களை வைத்திருந்தேன் என்றார் அவர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், அடுக்குமாடியில் நடவடிக்கை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 1எம்டிபி பற்றிய திட்ட ஆவணங்கள், 1எம்டிபி பற்றிய வாய்மொழி குறிப்புப் பதிவுகள். ஐபிஐசி எனப்படும் அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு கார்ப்பரேஷனிடமிருந்து வந்த மின்னஞ்சல்கள் ஆகியவை அடங்கும் என்றர் அவர்.
எனது இல்லத்தில் கைப்பற்றப்
பட்ட ஆவணங்கள் தேவையில் லாதவை என்று அமலாக்க அதிகாரிகள் கருதியதாக 43 வயது அம்ஹாரி எபென்டி கூறினார்.
ஜோலோ கூறியதால் சில ஆவணங்கள் அழிக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட அம்ஹாரி, ஜோலோ ஒரு தில்லுமுல்லு பேர்வழி என்பதால் ஒரு பாதுகாப்பு ஏற்பாடாக அதை வேறு முகவரியில் நீங்கள் வைத்திருந்தீர்கள் என்று கேட்டபோது அவர் அதை மறுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + thirteen =