ஹிஷாமுடினுக்கு எதிராக விசாரணை?

0

முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் அம்னோவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் விசாரிக்கப் பட்டு வருகிறார் என்று வெளியாகியுள்ள தகவலை அம்னோ தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அன்வார் மூசா மறுத்துள்ளார். அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான ஹிஷாமுடினுக்கு எதிராக எந்த புகாரும் செய்யப்படவில்லை என்ற அன்வார், இது குறித்து அம்னோ உச்சமன்றத்திற்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என்றார்.
ஹிஷாமுடின் அம்னோ ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்ற மலேசியா கினியின் செய்தி சந்தேகத்திற்குரியது.
ஹிஷாமுடினுக்கு எதிராக அம்னோ நிர்வாகம் எந்த புகாரையும் பெறவில்லை என்றார் அன்வார் மூசா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here