ஹிண்ட்ராப்பின் பதிவு ரத்து: சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி

ஹிண்ட்ராப் இயக்கத்தின் பதிவை சங்கங்களின் பதிவதிகாரி ரத்து செய்ததை எதிர்த்து, சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அந்த அனுமதியை வழங்கியது. எனினும், அந்த அனுமதிக்கான தகுந்த காரணங்களைப் பரிசீலிக்க புது மனுவை ஹிண்ட்ராப் தாக்கல் செய்ய வேண்டும். ஆர்ஓஎஸ்ஸின் முடிவை எதிர்த்து ஹிண்ட்ராப்பின் சார்பில், முன்னாள் அமைச்சர் பி.வேதமூர்த்தி கடந்தாண்டு டிசம்பர் 22ஆம் தேதி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 2019 செப்டம்பர் 30ஆம் தேதி ஆர்ஓஎஸ் ஹிண்ட்ராப்பை ரத்து செய்ததையும், அதன் பின்னர், கடந்தாண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி உள்துறை அமைச்சர் அந்த முடிவை அங்கீகரித்ததையும் எதிர்த்து வேதமூர்த்தி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கான விசாரணையை நீதிபதி மரியானா யாஹ்யா காணொளியின் மூலமாகவும் மின்னஞ்சல் வழியாகவும் நடத்தி அனுமதியை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + sixteen =