ஹாடிக்கு ‘தனிப்பட்ட’ நோக்கம் இருக்கிறது!

பிரதமர் துன் மகாதீர் 5 ஆண்டு காலம் வரை பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு ‘தனிப்பட்ட’ நோக்கம் இருப்பதாக திரெங்கானு பிகேஆர் தலைவர் அஸான் இஸ்மாயில் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் அதிகார மாற்றத்திற்கு இடையூறு விளைவிக்கவே பாஸ் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சொன்னார். பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் மீது தனிப்பட்ட அதிருப்தியின் காரணமாக ஹாடி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார். கடந்த 2004இல் சிலாங்கூர் மந்திரி பெசாராக டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் நியமனம் செய்யப்படுவதற்கு ஹாடி எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் பதவி மகாதீரிடமிருந்து அன்வாருக்கு கைமாறுவதை ஹாடி விரும்பவில்லை என்பதுதான் உண்மை என அவர் சொன்னார்.

ஆகையால் மகாதீர் மீதான பாஸ் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மகாதீருக்குத் தான் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் குறிப்பிட்டார். பாஸ் கட்சியின் இந்த நடவடிக்கை தேவையற்றது என பலர் கருதி வருவதாக அவர் தெரிவித்தார். காரணம் இவ்வாண்டு நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டிற்குப் பிறகு நாட்டின் தலைமைப் பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைக்கப் போவதாக மகாதீர் ஏற்கெனவே உறுதியளித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 6 =