
ஹரிமாவ் மலாயா தேசிய காற்பந்து அணியின் புதிய பயிற்றுநராக தென் கொரியாவைச் சேர்ந்த கிம் பான் கோன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் ஈராண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நாட்டின் காற்பந்து துறையின் மேம்பாட்டினை அதிகம் புரிந்து வைத்திருப்பவரான ஞயn ழுடிn, தன்னுடன் பகுப்பாய்வு அதிகாரி, தேகப் பயிற்சி அதிகாரி, உதவி பயிற்றுநர், தொழில்நுட்ப பயிற்றுநர் ஆகியோரை உடன் கொண்டு வருவார் என, மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஹமிடின் முகமட் அமீன் தெரிவித்தார். தேசிய காற்பந்து அணியின் தலைமை பயிற்றுநருக்கான பொறுப்பு தான் செங் ஹுய்–வின் விலகலுக்குப் பின்னர் காலியானது குறிப்பிடத்தக்கதாகும்.