ஹம்ஸா ஸைனுடினுடன் கூட்டு முயற்சியை ஜசெக – அமானா நிராகரிக்கும்!

0

பெர்சத்து பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடினுடன் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதை நிராகரிக்கப்போவதாக ஜசெக, அமானா கட்சிகள் கூறியுள்ளன.
புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான எந்தவொரு முயற்சியிலும் பக்காத்தான் ஹராப்பானின் பங்காளிக் கட்சிகளும் மகாதீரின் பெர்சத்து அணியும் வாரிசான் கட்சியுமே உள்ளடங்கியிருக்க வேண்டும் என ஜசெக உதவித் தலைவர் எம்.குலசேகரன் மற்றும் அமானா துணைத் தலைவர் சலேஹுடின் அயூப் கூட்டறிக்கை ஒன்றில் கூறினர். கடந்த 2018 மே 9இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் வாக்களித்த பக்காத்தான் ஹராப்பான் பிளஸின் 5 கட்சிகள் மட்டுமே புத்ராஜெயாவைக் கைப்பற்றும் முயற்சியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர். ஆகையால் ஷெரட்டன் நகர்வுக்கு தலைமை சதிகாரரான ஹம்ஸாவுடன் எந்தவொரு கூட்டணியும் இருக்கக்கூடாது என கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்தனர். அதே வேளையில் பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் மற்றும் பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் இணைந்து ஓர் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி எதுவும் இருக்கக் கூடாது என குலா மற்றும் சலேஹுடின் தெளிவுபடுத்தினர்.
வாரிசான் மற்றும் மகாதீரின் பெர்சத்து அணி எங்களின் எதிரிகள் அல்ல, ஊழல்மிக்க பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை எதிர்த்துப் போராடும் எங்களின் பங்காளிகள் என கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்தனர். அண்மையில் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடினுடன் தாம் சந்திப்பு நடத்தியதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிக்கை குறித்து இவர்கள் கருத்துரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − six =