ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் ஒன்றுகூடலில் பங்கேற்ற 3 இந்தோனேசியர்களுக்கு கோவிட் – 19

0

கடந்த மாத இறுதியில் ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு பள்ளி
வாசலில் சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 3 இந்தோனேசி யர்களுக்கு கோவிட் – 19 கிருமி தொற்றியுள்ளதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப் படுத்தியுள்ளது.
அந்த 3 இந்தோனேசியர் களும் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தோ னேசியாவின் ‘கொம்பாஸ்’ தினசரி கூறியது. அந்த தப்ளிக் ஒன்றுகூடலில் 1,500 அந்நிய நாட்டவர்கள் உட்பட சுமார் 16,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது வெளிநாடுகளில் கோவிட் – 19 வைரஸ் பரவுவதற்கு அந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களும் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த மாதம் நடந்த அந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்ட ஒருவர் நேற்று முன்தினம் ஜொகூர்பாருவில் மரணமடைந்தார். மரணமடைந்த அந்த நபருக்கு வேறு நோய் எதுவும் தொற்றியதற்கான அறிகுறி இல்லை என கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 7 =