ஸ்ரீ அபிராமி ரஷ்ய பயிற்சி பள்ளியில் இணைய தகுதி பெற்றார்

0

இளம் பனிச்சறுக்கு வீராங்கனை ஸ்ரீ அபிராமி சந்திரன் (வயது 7) ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள ரிகா லத்தியா அனைத்துலக பனிச்சறுக்கு அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள சென்று இருந்தார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் தேர்வுக்கு ஏற்ற புள்ளிகளை அவர் பெற்றுவிட்டதாக அவரது பயிற்சியாளர் அலெக்ஸாண்டர் ரகினி கூறினார்.
200-க்கு மேற்பட்ட அனைத்துலக பனிச்சறுக்கு விளையாட்டாளர்களுக்கு பயிற்சி வழங்கிய அவர், மலேசியாவில் இருந்து வந்த அபிராமியே தனது முதல் மாணவர் என பெருமையுடன் கூறினார். 200-க்கு மேற்பட்ட அனைத்துலக பனிச்சறுக்கு விளையாட்டாளர்களுக்கு பயிற்சி வழங்கிய அவர், மலேசியாவில் இருந்து வந்த அபிராமியே தனது முதல் மாணவர் என பெருமையுடன் கூறினார்.
அபிராமி கடுமையாக பயிற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் நிச்சயம் சாதனை படைப்பார் எனவும் தான் நம்பிக்கை கொள்வதாக அவர் தெரிவித்தார். கடந்த 12 நாட்கள் பயிற்சியில் அவர் தேர்வு பெற்று அடுத்த மூன்று ஆண்டுகள் இந்த அனைத்துலக பனிச்சறுக்கு பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என அவர் கூறினார்.
2020 ஜனவரி தொடங்கி 2023 வரை அபிராமி இப்பள்ளியில் பயிற்சி பெறுவார் அதன் மூலம் அடுத்த 2026ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கு பெறுவார் என அவரது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவர் இந்த ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு பெற மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு மொத்தம் 27 லட்சம் வெற்றி தேவைப்படுகிறது.
அதற்கு ஓம்ஸ். பா தியாகராஜன் 8 லட்சம் வெள்ளி நிதி உதவி செய்வதாக அறிவித்திருந்தார். அதன் முதற்கட்ட நிதியை வழங்கி இப்பயிற்சியை மேற்கொள்ள அவர் உதவி வழங்கியுள்ளார்.
மலேசியாவில் இந்த இளம் வயதில் இப்போட்டியில் பங்கு பெற்று இதுவரை 20 தங்கப் பதக்கம் வென்ற இந்த வீராங்கனைக்கு அரசு உதவ முன்வரவேண்டும். ஆனால் இவர் சார்பாக விளையாட்டு அமைச்சுக்கு முறையிட்டும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. அதனைப் போல் பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் வேத மூர்த்தி தலைமையில் இயங்கும் மித்ராவிடமும் விண்ணப்பம் செய்யப்பட்டு, அவர்கள் விளையாட்டிற்கு நிதி வழங்க முடியாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இவர் தொடர்ந்து இத்துறையில் வெற்றி பெற வேண்டுமென நல்ல நோக்கோடு கிள்ளான் இந்து இளைஞர் இயக்க பொறுப்பாளர்கள் ஓம்ஸ் அறவாரியத்துடனும் தமிழ் மலருடனும் இணைந்து நிதி திரட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
அதன் மூலம் இந்த சிறுமியின் ஒலிம்பிக் கனவு நனவாகும். மலேசிய இந்திய சமுதாயத்திற்கு விளையாட்டுத் துறையில் வீராங்கனைகளை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை சமுதாயம் ஏற்படுத்தித் தரும் என நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =