ஸ்ரீ அபிராமி பயிற்சி பெற வெ. 120,000 ஓம்ஸ் தியாகராஜன் நிதி உதவி

0

இளம் வயதில் பனிச் சறுக்குப் போட்டி விளையாட்டில் சாதனை படைத்து வரும் சிறுமி அபிராமி சந்திரன் தனது முதல் கட்ட பயிற்சிக்கு ரஷ்யா செல்கிறார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு தேர்வுச் சுற்று பயிற்சிக்கு தேர்வு பெற அவர் ரஷ்யா சென்றிருந்தார். அத்தேர்வில் அவர் வெற்றி பெற்று இப்போது 3 ஆண்டு கால பயிற்சிக்காக ரஷ்யா செல்கிறார்.
முதல் கட்ட நிதியாக செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் நேற்று முன் தினம் 120,000 வெள்ளி வழங்கினார்.
அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுக்குத் தேர்வு பெற அவர் பயிற்சி மேற்கொள்ள ஏறக்குறைய இருபது லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது.
அதற்கான நிதியை பெறுவதற்கு இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் இந்தியர்களுக்கான நிதி உதவி இலாகாவான மித்ராவிடமும் முறையீடு செய்தனர் .
ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அச்சிறுமி அனைத்துலக விளையாட்டில் ஜொலிக்க வேண்டும், நாட்டிற்கும் இந்திய சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஓம்ஸ் தியாகராஜன் 8 லட்சம் வெள்ளி நிதியை கட்டம் கட்டமாக வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
அதன் முதல் கட்டம் நேற்று முன்தினம் கிள்ளானில் நடைபெற்ற தங்கப்பதக்க ஏற்பாட்டுக் குழு விருந்து நிகழ்வில் அதற்கான காசோலையை அபிராமியின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
அப்போது கிள்ளான் இந்து இளைஞர் இயக்கப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 19 =