ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு பட்டு வஸ்திரங்கள் அனுப்பி வைப்பு

திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி சுமார் 40 ஆண்டுகள் இருந்ததாக ஐதீகம். அதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும். அப்போது, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையானுக்கும், தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள் கொண்டு செல்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது கொரோனா தொற்று பரவலையொட்டி, கடும் விதிமுறைகள் கோவிலில் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதனால், இந்த ஆண்டு 5 பேருக்கு மட்டுமே திருப்பதி வர தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில், அறங்காவலர்கள் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை கொண்டு செல்லும் நிகழ்வு நடந்தது. கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப்பொருட்களுடன் செல்லும் அவர்கள், இன்று(வியாழக்கிழமை) திருப்பதி சென்றடைகிறார்கள். அங்கு அவற்றை திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கிறார்கள். அதன்பிறகு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்கள் ஏழுமலையானுக்கும், தாயாருக்கும் சாற்றப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − seven =