ஸ்ரீகாளஹஸ்தி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

பள்ளிப்பட்டு தாலுகா வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 45). இவர் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மனவேதனை அடைந்த நீலகண்டன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கே.வி.பி.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீலகண்டன் உடலை மீட்டு ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here