ஸ்தாப்பாக் டேசா ரெஜாங் மக்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று காலை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஸ்தாப்பாக் டேசா ரெஜாங் குடியிருப்புக்கு வந்து அங்குள்ள மக்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
நகர்ப்புறங்களில் வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல இன்னல்களுடன் போராடிக் கொண்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறியும் நோக்கத்தில் அங்கு சென்றதாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமூகநல இலாகாவின் கீழ் நிதியுதவியைப் பெற்று வரும் தனலெட்சுமி பாபு, சான் கம் ஆகிய இரு மாதர்களையும் அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மாற்றுத் திறனாளி தம்பதியரான ரொசாலி-அர்த்தினியை அவர்களின் இல்லம் சென்று பிரதமர் நலம் விசாரித்தார்.
தனது 2 கால்களையும் இழந்து செயற்கைக் கால்களுடன் தையல் கடை நடத்தி வருவதாக ரொசாலி தெரிவித்தார்.
தனது முயற்சிக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் தூணாக இருப்பதாக ரொசாலி கூறியதைக் கேட்டு தாம் வியந்து போனதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வாரத்திற்கு ஒரு முறை தன்னார்வலர்கள் இவர்களின் இல்லங்களுக்குச் சென்று சுத்தம் செய்வதோடு தேவையான பொருட்களை வாங்கித்
தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது இவர்கள் அனைவருக்கும் சமூகநல இலாகாவின் மூலம் உதவிநிதி கிடைப்பது தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 10 =