ஸ்தாப்பாக் ஆயர் பனாஸ் சிவசக்தி சமாஜ் சமூகநல இயக்கத்தின் தீபாவளி அன்பளிப்பு

0

இல்லாதவர்களுக்கு கொடுத்து
உதவுவதே அர்த்தமிக்க தீபாவளி பெருநாளாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் ஸ்தாப்பாக் ஆயர் பனாஸ் சிவசக்தி சமாஜ் சமூகநல இயக்கம் வசதி குறைந்த
வர்களை ஒன்று திரட்டி அவர்க ளுக்கு தீபாவளி அன்பளிப்பை வழங்கியது.
தீபாவளிக்கு முன்னதாக நடைபெற்ற இந்நிகழ்வில் பி40 எனப்படும் அடித்தட்டு மக்களான 130 குடும்பங்களுக்கு ஒன்பது வகையான அடிப்படை உணவு – சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.
கடந்த 25 ஆண்டு காலமாக இந்த அன்பளிப்பு
வழங்கும் நிகழ்வை இயக்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும்
இந்த நிகழ்ச்சியை நடத்துவ தற்கு நல்லுள்ளங்களும் தொழில திபர்களும் பேராதவு வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டுகூட சேஃப்டி வாகனமோட்டும் பயிற்சி மையத்தின் தலைவர் குமரேசன் தனபாலன் 50 குடும்பங்களுக்கு சுமார் 200 வெள்ளி பெறுமான முள்ள பொருட்களை வழங்கினார். அவரோடு இன்னும் சில நல்லுள்ளங்களும் உதவிகள் நல்கியதாக நடராஜா கூறினார்.
நிகழ்வில் பிபிஆர் பகுதியில் வசிக்கும் வசதி குறைந்த 60 சிறுவர்களுக்கு பரிசுக்கூடைகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் பலதரப்பட்ட படைப்புகளும் இடம் பெற்றன. கடந்த பல ஆண்டுகளாக தன்னார்வ முறையில் இயக்கத்தில் சேவையாற்றி வரும் 10 இளைஞர்களுக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + seven =