ஸ்கூடாய் சீனப் பள்ளியில் கோவிட் வைரஸ் ?

0

ஸ்கூடாய் சீனப் பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 நச்சு உயிரி கண்டிருக்கிறது என்று பரப்பப்பட்ட தகவல் வெறும் வதந்தி என்று ஜொகூர் சுகாதாரத் துறை நேற்று அறிவித்துள்ளது.
இது போன்ற பொய்த் தகவல்களைப் பொது மக்கள் பரப்ப வேண்டாம் என்றும் அது கேட்டுக் கொண்டது. இது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் என்பதால் ஒரு தகவலைப் பகிர்கிறவர்கள் பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டும்.
போலித் தகவல்களைப் பரப்புகிறவர்களுக்கு எதிராக 1998ம் ஆண்டின் தொடர்பு முறை மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது சரத்து பாயும் என்று அது எச்சரித்தது. இச்சட்டத்தை மீறுகிறவர்களுக்கு எதிராக 50,000 ரிங்கிட் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − nine =