ஸ்குவாஷ் குழுப்பிரிவில் மலேசியாவுக்கு இரண்டு தங்கம்!

0

சீ போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள்-பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற மலேசிய அணி அண்மையில் குழுப்பிரிவிலும் இரு தங்கங்களை வென்றன.
ஆண்கள் அணி இறுதிச் சுற்றில் மலேசியா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது. இதில் மலேசியாவுக்கு தங்கத்தை உறுதிச் செய்யும் பொறுப்பை இளம் வீரர் டேரன் ராகுல் பிரகாசம் ஏற்றார். 3ஆவது ஆட்டத்தில் விளையாடிய டேரன் ராகுல் பிரகாசம் 11-5, 11-9, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசிய வீரர் முகமட் பைசாலை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பெண்கள் குழுப்பிரி வில் மலேசிய அணி
3-0 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி தங்கம் வென்றது.
முதல் ஆட்டத்தில் மலேசியாவின் ரிச்சல் 11-5, 11-6, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூரின் எஸ். சினேகாவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eleven =