ஸெட்டி விவகாரத்தில் சட்டத் துறை அமைச்சர் சொல்வது உண்மையா?

1எம்டிபி நிதி மோசடியில் பேங்க் நெகாரா முன்னாள் கவர்னர் டான்ஸ்ரீ ஸெட்டி அக்தார் அஸிஸ் சம்பந்தமாக சட்டத் துறை அமைச்சர் உண்மையைச் சொல்லவில்லை என்று மலேசியா டுடே இணைய பத்திரிகையில் ராஜா பெத்ரா கமாருடின் குறிப்பிட்டுள்ளார். ஸெட்டியின் கணவர் தவ்ஃபிக் ஐமானின் வங்கிக் கணக்கில் 1எம்டிபியின் பணம் 65 மில்லியன் ரிங்கிட் வரவு வைக்கப்பட்டது 2019ஆம் ஆண்டில்தான் மலேசிய போலீசாருக்குத் தெரிய வந்ததாக சட்டத் துறை அமைச்சர் வான் ஜுனைடி வான் ஜாபார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அது சம்பந்தமாக விசாரணை தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளர். இதனிடையே தவ்ஃபி ஐமானுக்கும் சேமுவேல் கோவுக்கும் சொந்தமான கட்டிங் எட்ஜ் நிறுவத்திடமிருந்து 15.4 மில்லியன் டாலரை (ரிம .64.5 மில்லியன்) ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கட்டிங் எட்ஜ், ஐயன் ராப்சோடி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிதிய அதிகாரத்துவ மையம் பேங்க் நெகாராவுக்குத் தெரிவித்துள்ளது. அது சம்பந்தமாக 2014 டிசம்பரில் போலீஸ் புகாரும் செய்யப்பட்டுள்ளது. 2018 மே மாதம் சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் மலேசிய சட்டத்துறை அமைச்சர் டோமி தோமஸை சந்தித்து, நிதி பரிவர்த்தனை பற்றித் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டோமி தோமஸ் அது பற்றி ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ் துறை ஆகியவற்றோடு கலந்து பேசி இருக்கிறார். அதன் பின்னர், இந்த விவகாரம் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனை 2019இல் தான் தெரிய வந்ததாகச் சொல்வது உண்மைக்கு மாறானது என்று ராஜா பெத்ரா கமாருடின் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =