ஸுரைடாவிற்கு எதிராக வழக்குத் தொடர்வேன்

0

அவதூறு பேசியதற்காக பிகேஆர் உதவித் தலைவர் ஸுரைடா கமாருடினுக்கு எதிராக தாம் வழக்குத் தொடரப் போவதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சருமான ஸுரைடாவிற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு காரணம் கோரும் கடிதம் அனுப்பியிருப்பதோடு, தனிப் பட்ட நிலையில் தாம் ஸுரைடாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அவர் சொன்னார்.
“கடந்த டிசம்பர் மாதம் ‘ரெனாய்ஸன்ஸ்’ தங்கு விடுதியில் நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் என்னை அவதூறு படுத்தும் வகையில் ஸுரைடாவின் உரை அமைந்திருந்தது” என உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 8 =