ஸுரைடாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது

0

பிகேஆர் உதவித் தலைவர் ஸுரைடா கமாருடின் மீது குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, கட்சியின் கட்டொழுங்கு நடவடிக்கை வாரியத்தை கட்டாயப்படுத்த முடியாது என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இப்பிரச்சினையை கட்சியின் கட்டொழுங்கு நடவடிக்கை வாரியம்தான் கையாள வேண்டும். குறிப்பிட்ட நடவடிக்கை அல்லது முடிவுகளை எடுக்குமாறு நாங்கள் அவ்வாரியத்தை கட்டாயப்படுத்த முடியாது என்று நேற்று கோலதிரெங்கானுவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஸுரைடாவிற்கு காரணம் கோரும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. கட்டொழுங்கு வாரியம் அவரின் பதிலுக்காகக் காத்திருக்கிறது. அது நல்லதொரு முடிவை எடுக்கும் என்று நான் நம்புகிறேன் என அவர் கூறினார்.
அந்த கட்டொழுங்கு நடவடிக்கை வாரியம் தலைமைத்து
வத்தால் அமைக்கப்பட்டது என்றா
லும் குறிப்பிட்ட முடிவை எடுக்கும்படி தாம் அதை கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.
அவ்வாரியத்தின் தலைவர் அமாட் காசிம் சில குறிப்புகளை எழுதியிருக்கிறார். எனினும் அதன் விவரங்களை தலைமைத்துவத்திற்கு அவர் விளக்கமாகக் கூறவில்லை. இது அவ்வாரியத்தின் செயல்பாட்டு தரமுறையாகும் என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்.
அண்மையில் பிகேஆர் தலைவர்கள் 46 பேர் ஒன்றுகூடி ஸுரைடாவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்ததைப் பற்றியும் அன்வார் கருத்துரைத்தார்.
“அந்த கடிதத்தை வாபஸ் பெறுமாறு அவர்கள் கூறுகின்றனர். கட்சியின் கட்டொழுங்கு வாரியம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here