ஸாஹிட் ஹமிடியை அமைச்சராக நியமனம் செய்ய வேண்டாம்!

அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி அமைச்சரவைக்கு நியமனம் செய்யப்பட்டால், பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையக் கூடும் என முன்னாள் தiலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் எச்சரித்தார். “அது மட்டுமில்லால் நான் உட்பட பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருபவர்கள் தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்ள நேரிடும்” என அவர் சொன்னார்.

நடப்பு ஆளும் கூட்டணியில் இருந்து மீட்டுக் கொள்ளப் போவதாக அம்னோ எச்சரித்தாலும், இந்த விவகாரத்தில் முஹிடின் மற்றும் அவரது சகாக்கள் சமரசமாகப் போகக் கூடாது என அவர் குறிப்பிட்டார். ஸாஹிட் ஓர் அமைச்சராக அல்லது துணைப் பிரதமராக நியமிக்கப்படாவிட்டால் பெரிக்காத்தான் நேஷனலில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அம்னோ மிரட்டினால், அரசாங்கத்தில் இருந்து அம்னோ விலகிக் கொள்ளட்டும். பெரிக்காத்தான் நேஷனல் கவிழட்டும். இந்த நடப்பு அரசாங்கம் ஒருநாள் அரசாங்கமாக இருந்தாலும் நியாயமானது எதுவோ அதைச் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். ஸாஹிட் உட்பட 6 அம்னோ எம்பிக்கள் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர் நோக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 16 =