ஸாஹிட், நஜிப்பிடமிருந்து தலைமைத்துவத்தைக் கைப்பற்ற ‘அம்னோ 3.0’ திட்டம்

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி, அக்கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகியோரிடமிருந்து கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற ‘அம்னோ 3.0’ என்றழைக்கப்படும் கட்சியின் புதிய அணியினர் திட்டம் கொண்டுள்ளனர்.இந்த ‘அம்னோ 3.0’ என்றழைக்கப்படும் அணிக்கு ஒரு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவதோடு வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்து, பாஸ் கட்சிகளுடன் ஒத்துழைக்க இத்தரப்பினர் முடிவு செய்துள்ளனர். இனி வரும் நாட்களில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும்படி குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் உள்ள அம்னோ தலைவர்கள் ஸாஹிட்டிற்கு நெருக்குதல் தரவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. கடந்த 1987இல் அம்னோ வில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ‘அம்னோ 2.0’ என அம்னோ அழைக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் ஸாஹிட்டிற்கு பிடிவாதமாகத் தங்களின் விசுவாசத்தை இன்னும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஸாஹிட்டும் நஜிப்பும் அம்னோ தலைமைத் துவத்தில் இருந்து அகற்றப் பட்டால் ஒரு புதிய அம்னோ அணியினர் வலிமையுடன் செயல்படும் சாத்தியம் இருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. மேலும் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை பிரதமர் வேட்பாளராக ‘அம்னோ 3.0’ ஆதரிக்கும் என தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − five =