ஸாஹிட்டுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்

0

அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடியை புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளும் படி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை சபா அம்னோ தலைவர் புங் மொத்தார் ராடின் கேட்டுக் கொண்டார்.பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ள ஸாஹிட் இன்னும் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என என அவர் சுட்டிக் காட்டினார்.
ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப் படும்வரை அவர் நிரபராதியே என கினபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் அமைச்சரவையில் ஸாஹிட்டுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் தமது பதவியிலிருந்து அவர் விலகிக் கொள்ளலாம் என புங் குறிப்பிட்டார்.பணச் சலவை , நம்பிக்கை மோசடி உட்பட 47 குற்றச்சாட்டுகளை அந்த முன்னாள் துணைப் பிரதமர் எதிர் நோக்கியுள்ளார்.
ஸாஹிட்டுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களால் திட்டமிடப்பட்டது. நீதிமன்றத்தில் தாம் நிரபராதி என்பதை ஸாஹிட் நிரூபித்துக் காட்டுவார் என அவர் சொன்னார்.பக்காத்தான் ஹராப்பானிலுள்ள பல தலைவர்கள் குற்றச் சாட்டுகளிலிருந்து விடுபட்டுள்ளனர். காரணம் பக்காத்தான் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியதை தொடர்ந்து இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 20 =