ஸாஹிட்டின் கையொப்பம் போலவே இருக்கின்றது

யாயாசான் ஆக்கால் பூடி நிறுவனம் விநியோகித்த 16 காசோலைகளிலும் காணப்பட்ட கையொப்பம் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடியின் கையொப்பத்தைப் போலவே இருப்பதாக இரசாயன நிபுணர் சித்தி நுர் முஸ்லிஹா முகமது நூர் (வயது 41) நேற்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

‘எஸ்‘ என்று அடையாள மிடப்பட்ட ஸாஹிட்டின் கையொப்ப மாதிரியோடு 10 காசோலைகளின் கையொப்பங்களில் காணப்பட்ட ‘கீறல்கள்’ ஒத்துப் போகின்றன என்பதால் அவை ஸாஹிட்டின் கையொப்பம்தான் என்று நம்புகிறேன். இதர 6 காசோ லைகளிலும் ‘எஸ்’ கையொப்ப மாதிரியோடு ஒத்துப் போவதால் அவை யாவும் ஸாஹிட்டின் கையொப்பமாக இருக்கலாம், என்று அனுமானம hகக் கூறினார்.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 49 காசோலைகளும் வீடியோ ஸ்பெக்ட்ரல் ஒப்பீட்டுக் கருவி மூலம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. அவற்றில் ஸ்டீரியோ நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோப்) பொருத்தப்பட்டுள்ளது.

ஸாஹிட்டின் வழக்கறிஞர் ஹிஷாம் தே போ தெய்க் குறுக்கு விசாரணை மேற்கொண்ட போது அந்தக் கையொப்பங்கள் உண்மையிலேயே ஸாஹிட்டின் கையொப்பங்கள் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றார்.

67 வயது நிரம்பிய அகமது ஸாஹிட் 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் 12 நம்பிக்கை மோசடி (சிபிடி) குற்றச் சாட்டுகள் ஆகும்; எட்டு ஊழல் மற்றும் 27 சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டுகளும் இவற்றில் அடங்கும்.
நீதிபதி கோலின் லாவ்ரன்ஸ் செக்குய்ரா முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =