ஸாஹிட்டின் அறக்கட்டளைக்கு அறங்காவலராக இருந்ததில்லை!

அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் அக்கால் பூடி அறக் கட்டளைக்கு தமது வழக்கறிஞர் நிறுவனம் அறங்காவலராகச் செயல்படவில்லை என்று வழக்கறிஞர் வி.பிரேம்சங்கர் தெரிவித்தார்.
தாம் ஸாஹிட்டின் அக்கால் பூடி அறக்கட்டளையின் வழக்குகளுக்குப் பொறுப்பாக இருந்ததாகவும் அவரின் வங்கிக் கணக்குகளில் காசோலைகளையும் ரொக்கத்தையும்
சேர்ப்புக்கும் வேலைகளைச் செய்யவில்லை என்றும் 50 வயதான அவர் தெரிவித்தார்.
தாம் லூவிஸ் வழக்கறிஞர் நிறுவனத்தில் 1998ஆம் ஆண்டிலிருந்து ஒரு பங்காளியாக இருந்ததாகவும் அந்த அறக்கட்டளையின் நிதிப் போக்குவரத்து பிரச்சினைகளைத் தமது பங்காளியான பி.முரளிதரன் கவனித்துக் கொண்டதாக பிரேம்சங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, அவரது நிறுவனத்தின் கணக்காயர் வி.சோதிலட்சுமி நேற்று முன்தினம் அளித்த நீதிமன்ற சாட்சியத்தில், லெவிஸ் வழக்கறிஞர்
நிறுவனம் அல்-ஃபாலா அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளைக் கவனித்து வந்ததாகவும் 2016லிருந்து 2018ஆம் ஆண்டு வரை அந்த அறக்கட்டளையின் 66.6 மில்லியன் ரிங்கிட்டுக்க்கான நீண்ட கால வைப்புத் தொகைக்கான ஆவணங்களைக் கையாண்டிருப்பதாகத் தெரிவித்தார். தமது குடும்ப அறக்கட்டளையின் பணத்தை முறைகேடாக பெற்று அதிகாரத் துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி, பண மோசடி மற்றும் ஊழல் செய்ததாக ஸாஹிட் ஹமிடியின் மீது 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன.
தற்போது அதன் வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செக்கூரா முன்னிலையில்
நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =