ஸக்கீர் மீதான பேச்சுத்தடை சரியே; காவல்துறை விளக்கம்

0

கோலாலம்பூர், ஆக. 23-
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸக்கீர் நாயக் பொதுக்கூட்டங்களில் பேச விதிக்கப்பட்ட தடை, சட்டத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை நேற்று விளக்கமளித்தது.
அவருக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சட்ட அடிப்படைகள் எதுவும் இல்லை என சில வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு காவல்துறையில் தொடர்புப் பிரிவின் தலைவர் டத்தோ அஸ்மாவத்தி அமாட் கூறினார்.
நாட்டில் அமைதி, பொது ஒழுங்கை நிலைநிறுத்துவது காவல்துறையின் கடமை. அந்த அடிப்படையில் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. 1966ஆம் ஆண்டின் காவல்துறை சட்டம் 3 (3) இன் கீழ் இந்தத் தடை செல்லும் என்று அவர் சொன்னார்.
ஸக்கீர் நாயக்கிற்கு விதிக்கப்பட்ட பேச்சுத் தடைக்கு சட்டத்தில் இடமே இல்லை என்று 2 வழக்கறிஞர்களான ஹனிப் கத்ரி, நியூ சின் சியூ ஆகியோர் கூறியுள்ளனர்.
மலேசிய இந்தியர்களை விசுவாசமற்றவர்கள் என்றும் மலேசிய சீனர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பேசியதற்காக, அந்த 53 வயது மதபோதகர் பொதுநிலையில் பேசக்கூடாது. ஊடகங்களிலும் பேசக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஸக்கீர் மீண்டும் புக்கிட் அமான் காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் செய்த குறிப்பாக 5 இந்தியத் தலைவர்களுக்கு எதிரான போலீஸ் புகார் தொடர்பாக விசாரிக்க அவர் அழைத்துவரப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் அக்பர்தீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − four =