ஸக்கீர்-ஜாவியை எதிர்த்து மாபெரும் பேரணி

கோலாலம்பூர், ஆக. 24-
இந்தியர்களின் விசுவாசத்தை கேள்வி எழுப்பி பேசிய ஸக்கீர் நாயக் விவகாரம் தொடர்பாகவும் தமிழ்ப் பள்ளிகளில் ஜாவி அறிமுகம் தொடர்பாகவும் பிரிக்பீல்ட்ஸில் மாபெரும் பேரணிக்கு காவல்துறை தடைவிதித்த நிலையிலும், அங்கு நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதியான முறையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இப்படி ஒரு பேரணிக்கு அனுமதி தரப்படவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் மஸ்லான் நஸிமும் பிரிக்பீல்ட்ஸ் இடைக்கால காவல்துறை தலைவர் அரிபை தாராவியும் கூறியிருந்தனர்


எனினும் நேற்று ’புரட்சிக்குழு என்ற இயக்கத்தினரின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். 10 நிமிடங்கள் மட்டுமே இந்த பேரணிக்கு அனுமதி என காவல்துறை தெரிவித்தும் தொடர்ந்து அவர்கள் அங்கு குழுமினர். பேரணியில் அதிகமான பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை கட்டுமீறாமல் இருக்க ஏற்கெனவே காவல்துறையும் கலகத் தடுப்புப் பிரிவும் அங்கே குவிக்கப்பட்டிருந்தன.


இந்நிலையில் இந்த பேரணிக்கு முன்னின்ற உமாகாந்தன் என்பவரை காவல்துறை அழைத்துச் சென்றது. இந்தியர்களின் விசுவாசத்தை கேள்வி எழுப்பிய ஸக்கீரை வேண்டாம் என்று சொல்வோம்… மற்ற இனங்களோடு இந்தியர்களுக்கும் சம உரிமை வேண்டும்… என்ற சுலோகத்தோடு இந்த பேரணிகள் நடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 4 =