ஸக்கீரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்; முன்னாள் ஐஜிபி கோரிக்கை

0
F

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸக்கீர் நாயக்கின் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை ரத்து செய்து அவரை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கு மாறு முன்னாள் ஐஜிபி டான்ஸ்ரீ அப்துல் ரஹிம் நோர் கூறினார்.அவருக்கு எதிராக விசாரணைகள் நடந்தாலும் இப்படி ஒரு முடிவைச் செய்ய அரசுக்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன. கிளந்தானில் அவர் ஆற்றிய உரைக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்தியாவில் எதைச் செய்தாரோ அதைச் செய்திருக்கிறார்.
எனவே அவரது நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு இந்திய அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள். இந்தியாவின் சட்டத்தை அவர் எதிர்கொள்ளட்டும் என்றார் அவர். என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் உணர்வுகளை குறிப்பாக இந்துக்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறார்.
அவரது விசாரணை வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நான் சொல்கின்ற இந்த முடிவை எதிர்க்கின்றவர்கள் இந்தியாவில் உள்ள மற்ற சமய போதகர்கள் ஏன் இப்படி சட்டப்பிரச்சினைகளை எதிர்நோக்கவில்லை என்பதை அறிய வேண்டும் என்றார் அவர்.தமது சொந்த நாட்டில் சட்டத்துக்கு எதிராக இவர் செய்த ஒன்றால்தான் இந்திய அதிகாரிகளால் தேடப்படுகிறார். வெளிநாட்டவர்கள் இங்கு வந்து சமயத்தைப் பயன்படுத்தி குழப்பத்தையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடாது என்றார் அவர்.
தமது நடவடிக்கைகளுக்கு இவர் பொறுப்பேற்க வேண்டும். ’எதை விதைத்தாயோ அதை எதிர்கொள்ள வேண்டும் என்ற மலாய் பொன்மொழி போல் அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக இவரைப் போன்றவர்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. நம்மிடம் இஸ்லாமிய சொற்பொழிவாளர்களுக்கும் இஸ்லாமிய அறிஞர்களுக்கும் அவ்வளவு பஞ்சமா? என்றார் அவர்.
இவருக்கு முந்தைய அரசாங்கம் எப்படி நிரந்தர வசிப்பிட அந்தஸ்து தந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அதிலும் வந்தவுடன் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர்.அண்மையில் இந்தியர்களையும் சீனர்களையும் அவமதித்துப் பேசிய ஸக்கீர் நாயக்கின் பேச்சு நாட்டில் பெரும் கொந்தளிப்பையும் ஆட்சேபத்தையும் ஏற்படுத்தியிருப்பது தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + nineteen =