வைரஸ் நோய் பரபரப்பிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எழுவர் நியமனம்

நாட்டில் கோவிட்-19 வைரஸ் நோய் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில், 7 சட்டத்துறை ஆணையர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வழங்கம்போல அந்நிகழ்ச்சி நடைபெறாமல், மூடிய அரங்கில் நடத்தப்பட்டதாக கூட்டரசு நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீதிமன்ற ஆணையர்களாக பணியாற்றியுள்ளனர். ரொஹானி இஸ்மாயில், ஆன்ஸ்லெம் சார்ல்ஸ் பெர்னாண்டிஸ், அமாட் ஃபைருஸ் ஸைனோல் அபிடின், முகமட் ராட்ஸி ஹருண், அலிஸா சுலைமான், மியோர் ஹஷிமி அப்துல் ஹமிட், லிம் ஹோக் லேங் ஆகியோரே அவர்களாவர். லிம், சபா, சரவாக்கிற்கான தலைமை நீதிபதி அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிம் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட வேளையில், மற்றவர்கள் மலாயா தலைமை நீதிபதி அஸஹார் முகமட் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அந்நிகழ்ச்சியில் நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான், மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரொஹானா யூசோப் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். 5 உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் குத்தகைக் காலம் மார்ச் 31ஆம் தேதி காலாவதியாவதால், இந்தப் புதிய நீதிபதிகளின் நியமனம் விரைவாக நடைபெற்றுள்ளது. வழக்கமாகப் பதவி உறுதிக் கடிதத்தை பேரரசரே வழங்குவார். ஆனால், கோவிட்-19 தாக்கத்தின் எதிரொலியால், அச்சடங்கு நடைபெறவில்லை. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் உயர்நீதிமன்ற, மேல் முறையீட்டு நீதிமன்ற, கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொள்ளாமல், புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் கணவர் அல்லது மனைவிமார் மட்டுமே கலந்து கொண்டனர்.

தலைமை நீதிபதியின் உரை நிகழ்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு, குழுப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =