வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: போலீஸார் விசாரணை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கிய மோசடி நபர் மீது சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Advertisement

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோ புகார் அளித்திருந்தார்.

image

Advertisement

அந்தப் புகாரில், “தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை தொடங்கி அதன் மூலம் அவதூறான கருத்துக்களை பரப்புகின்றனர். அந்த நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” தெரிவித்திருந்தார்.

image

இது தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன் பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ட்விட்டர் கணக்கை தொடங்கிய அடையாளம் தெரியாத நபர் மீது தகவல் தொழில்நுட்பப்பிரிவு 66 டி (இணையதளம் மோசடி) என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த போலி ட்விட்டரை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + sixteen =