அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று. பட்டி தொட்டி எங்கும் பயணம் செய்து விவசாயிகள், இளைஞர்கள் மத்தியில் அவர் மேற்கொண்ட பரப்புரையால் தான் தமிழகத்தில் இந்த அளவுக்கு இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வும், ஈடுபாடும் ஏற்பட்டிருக்கிறது.
நாம் அனைவரு இயற்கை வேளாண்மைக்கு திரும்பும் பாதையில் பயணிப்பதே ஐயா நம்மாழ்வாரின் பணிகளுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும். இந்நாளில் அதற்கான உறுதியை ஏற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.