வேலை பாதுகாப்புக்கான பணிப்படையின் அவசியம்

0

கோவிட்-19 நோயினால் பல்வேறு துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதால், அதனை சமயோசிதமாக எதிர்கொள்ள வேலை பாதுகாப்புக்கான பணிப்படை ஒன்றை அரசு அமைக்க வேண்டுமென்ற தமது பரிந்துரையை விமர்ச்சித்திருக்கும் மலேசியகினி பத்திரிகைக்கு முன்னாள் மனிதவள அமைச்சரான எம்.குலசேகரன் தமது விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
கருத்துகளை வெளியிட அனை வருக்கும் உரிமை இருந்தாலும், நாடு கோவிட்-19 நோய் தொற்றை எதிர்நோக்கும் நேரத்தில், எதையும் அரசியலாக்கத் தாம் விரும்ப வில்லை என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய் தாக்கத்தின் காரணமாக பல்லாயிரக் கணக் கானோர் வேலையிழக்கும் அபாயம் இருப்பதால், அவர்களின் வருமானம் பாதிக்காமலும் செய்யும் தொழில்களைத் தொடரவும் பணிப்படை அமைப்பது அவசியம் என தாம் பரிந்துரைத்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், பி40 நிலையில் உள்ள உடலு ழைப்புத் தொழிலாளர்கள் பாதிப்படைவதிலி
ருந்து காப்பது அரசின் கடமை யாகும். நாடு பொருளாதாரச் சவால்
களை எதிர்நோக்கும் இவ்வேளை
யில், தொழில் திறன் கொண்டவர் களையே முதலாளிகள் விரும்புவர். இதன் மூலம் மேற்கண்ட பிரிவினர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.
எனவே, அம்மாதிரி வேலை யிழக்கும் பி40 பிரிவினருக்கு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேவையான பயிற்சிகளை அளிக்க அரசு முன்வர வேண்டும்.
வேலைகளைத் தற்காக்க அரசு குறுகிய கால இழப்பீடு அல்லது வேலையைப் பங்கிட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை அரசு மேற்கொள்வதோடு வேலைக்கான காப்பீட்டுத் திட்டத்தை சீரமைத்து தொழிலாளர் கொள்கைகளை மேம்படுத்தி புதிய வேலைகளை உருவாக்கலாம் என்றும் குலசேகரன் தெரிவித்தார்.
மேலும், தாம் மனிதவள அமைச்சராக இருந்தபோது, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தொழிலியல் கொள்கை களை வகுத்ததாகச் சுட்டிக் காட்டினார். 2019ஆம் ஆண்டு முதலாளிமார் சங்கம், மலேசிய தொழில் சங்க காங்கிரஸ் ஆகிய
வற்றின் கூட்டுறவில் தேசிய மனிதவள ஆலோசனை மன்றம்
அமைக்கப்பட்டது. அந்த ஆலோ
சனை மன்றம் 10 முறை கலந்தாலோ சனைகளை நடத்தியது.
நாட்டில் ஆள்கடத்தலைத் தடுக்க முதலாளிகளின் உதவி
யைக் கோரும் வகையில் பொது மக்களுக்காக கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
நான்காவது தொழில் புரட்சியை எதிர்கொள்ளவும் தொழிலாளர்கள் அதிலிருந்து பாதிக்கப்படாமல் தவிர்க்கவும் மனிதவளக் கொள்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. 1967ஆம் ஆண்டு தொழிலியல் உறவுச் சட்டம், 1966ஆம் ஆண்டு சிறார் மற்றும் இளையோருக்கான தொழில் சட்டம், 2019ஆம் ஆண்டுக்கான குடியிருப்பு மற்றும் அத்தியாவசியச் சேவைச் சட்டம் முதலியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
1959ஆம் ஆண்டு தொழில் சங்கச் சட்டம், 1994ஆம் ஆண்டு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம், 1955ஆம் ஆண்டுக்கான தொழிலியல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டன.
வீட்டிலுள்ள மனைவிமார்களும் சொக்சோவினால் பாதுகாப்பு வழங் கப்பட, அச்சட்டத்திலும் திருத்தம் செய்ய ஆவண செய்யப்பட்டது.
பிரசவ கால விடுமுறையை 90 நாள்களாக ஆக்கிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதோடு கணவன்மார்களுக்கு அக்காலக் கட்டத்தில் 7 நாள்களுக்கு சம்பளத் தோடு கூடிய விடுமுறையளிக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
நாட்டிலுள்ள பூர்வகுடி இன மக்களின் பிள்ளைகள் வாழ்க் கையில் பின்தங்கிவிடாமல் இருக்க,
அவர்களுக்கு டிவெட் எனப்படும் தொழில் திறன், தொழில் பயிற்சி களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்
பட்டது. அத்திட்டத்தில் 50 மாணவர்
களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட்டன. தொழிலாளர்கள் புதுப் புது திறன்களை வளர்த்துக் கொண்டு வருமானத்தை அதிகரிக்க, பல்வேறு தொழில் திறன் பயிற்சி வகுப்புகள் மாலை 5.30 மணியிலிருந்து இரவு11 மணி வரை வழங்கப்படுகிறது.
தொழில் திறன் பயிற்சியின் வாய்ப்புகளை விளக்கும் வகையில் புறகநகர்களில் இருக்கும் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீட்டுடைமைத் திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க, சைம் டார்பி நிறுவனம் சுங்கை சிப்புட்டில் கொடுத்த 4.04 ஹெக்டர் நிலத்தில் 100 வீடுகளை நிர்மாணிக்க திட்டம் தொடங்கப்பட்டது.
மனிதவள மேம்பாட்டு நிதியில் முறைகேட்டை வெளிப்படுத்த புலன் விசாரணை மேற்கொள்ளபட்டு, சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.
தமது அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் தாம் 4,000 பேர்களிட
மிருந்து புகார்களைப் பெற்று 1,000க் கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
அந்நிய நாட்டுத் தொழிலாளர் களைத் தருவிப்பதை முறைப்படி
செய்வதற்கான பரிந்துரையை அரசிடம் சமர்ப்பிக் கப்பட்டதாக
வும், ஜப்பானில் மலேசிய தொழி லாளர்கள் அனுபவப் பயிற்சியைப் பெற அந்நாட்டு அரசோடு ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டிருப்பதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eighteen =