வேலை இழந்தவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்

கோவிட்-19 தாக்கத்தினால் பல வணிகங்கள் பாதிப்படைந்தது மட்டுமின்றி பலர் வேலைகளை இழந்துள்ளனர்.
வேலை இழந்த பலருக்கு சிறு வியாபாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில், வேலை இழந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சாலை ஓரங்களில் உணவு வகைகளை விற்பனை செய்ய சிலாங்கூர் மாநில அரசு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
சிறிய வணிகங்களைத் தொடங்கவிருக்கும் வணிகர்களுக்கு உள்ளூர் வர்த்தக சங்கங்களால் தற்காலிக வணிக உரிமங்கள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் அரசு நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
இந்த உரிமத்திற்கு விண்ணப்பிக்க நினைக்கும் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட வர்த்தக சங்கத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திட்டத்தின் மூலம், கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், மீண்டும் அவர்களின் வணிகங்களைத் தொடரவும் உதவும்.
வணிக உரிமங்கள் கிடைக்கப்பெற்றவர்கள், உரிமத்தை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் லாபம் ஈட்டுவது என தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று சிலாங்கூர் உள்ளூராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாட்டுக் குழுத் தலைவர் இங் ஸெ ஹான் கூறினார்.
இது கடுமையான குற்றம் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அந்தந்த உள்ளூராட்சி மன்றங்கள் விதித்துள்ள விதிமுறைகளை கடைக்காரர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்
கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 6 =