வேலையில்லாதோருக்கு அரசு உதவ வேண்டும்

0

கோவிட்-19 நோய்த் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைச் சீர்படுத்த, அரசு கோடிக்கணக்கான நிதியை செலவிடும் வேளையில், அந்த உதவியானது சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் உதவ வேண்டுமென மலேசிய சோஷலிச கட்சியின்(பிஎஸ்எம்) தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.இந்த வேளையில், வேலையில்லாமல் சிரமப்படுவோருக்கு அரசின் திட்டங்கள் உதவ வேண்டுமென்றும், அவர்களுக்கு மாதாந்திர வருமானத்தை அளிக்கும் வகையில் அனைத்துலக நிலையிலான மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை வருமானத்(யுபிஐ)திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத் தினார். எது நடந்தாலும், மக்கள் அன்றாட உணவுக்கில்லாமல் பசியால் வாடக்கூடாது. எல்லாக் குடும்பத்துக்கும் சீரான வருவாய் கிடைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் வேலையில்லாமல் இருந்தால், உணவை வாங்கிக் கொள்ள நிதியுதவி வழங்கப்பட வேண்டும். வேலையில்லாதோருக்கும் 1,000 ரிங்கிட்டுக்கும் குறைவான ஓவ்வூதியம் பெறுவோருக்கும் மாதமொன்றுக்கு 1,000 ரிங்கிட் வீதம் ஓராண்டு காலத்துக்கு வழங்கலாம்.
பொருளாதாரம் இயங்க வேண்டும். பொருள்கள் உற்பத்திச் செய்யப்பட வேண்டும். சேவைகள் வழங்கப்பட வேண்டும். எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் முறைசாரா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அம்மாதிரியான தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அரசின் நிதியுதவித் திட்டத்தில் அவர்கள் பலனடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அரசு அமல்படுத்தி வரும் நிதியுதவித் திட்டங்கள் பெரும்பாலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே உதவுவதாக உள்ளன. அது அற்றைக் கூலித் தொழிலாளர்களுக்கு உதவவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அம்மாதிரியான தொழிலாளர்கள் பசியால் வாடுவதைத் தடுக்கவும் வேண்டும்.
எனவே, இந்த யுபிஐ திட்டத்தை அரசு மேற்கொள்ள முன்வர வேண்டுமென்று மைக்கல் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு தமிழ்மலர் நாளிதழை வாங்குங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =