வேலைக்குச் செல்லும் அனுமதி கடிதம் தவறாக பயன்படுத்தாதீர்கள்

சிஎம்சிஓ எனப்படும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்தது. வேலைக்கு செல்வோர் தங்களது வேலை பாஸ் அல்லது நிர்வாகத்தின் கடிதங்களை போலீசாரிடம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், வார இறுதி நாட்களில் வேலைக்குச் செல்வதற்கான அனுமதி கடிதங்களைத் தவறாக பயன்படுத்தும் சில ஊழியர்களை போலீசார் அடையாளம் கண்டிருக்கின்றனர்.இதன் தொடர்பான மேல் நடவடிக்கைக்காக தங்கள் தரப்பு சம்பந்தப்பட்ட முதலாளிமார்களைத் தொடர்புக் கொள்ளவிருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி எஸ். சண்முகமூர்த்தி சின்னையா சுட்டிக் காட்டினார்.சில துறைகள் வார நாட்களில் மட்டுமே செயல்பட்டாலும் சுய நோக்கத்திற்காகவும் சரியான காரணமின்றியும் வார இறுதி நாட்களில் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க வேலைக்கு செல்வதற்கான அனுமதி கடிதத்தை சிலர் பயன்படுத்துவதாக சண்முகமூர்த்தி தெரிவித்தார்.அதிலும் சிலர் தங்களின் சக ஊழியர்களுக்கு தங்களுக்கு கிடைத்த கடிதத்தின் நகலைப் பயன்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் அனைவரும் வேலையில்லா நாளில் ஒரே நேரத்தில் வேலைக்கு செல்ல சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, சிலர் பொருட்கள் அனுப்புவதாக காரணம் கூறி, எந்தவொரு பொருளும் இல்லாமல் வெளியில் செல்வதும் தெரிய வந்துள்ளதால், பொருட்கள் அனுப்பும் சேவை போன்ற இதர துறைகளைச் சேர்ந்தவர்களிடமும் மிக தெளிவான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும்அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =