வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?: ஜெ.தீபா

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- இந்த சாதகமான தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?பதில்:- இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.கேள்வி:- இந்த வழக்கு நடைபெற்றபோது ஏதேனும் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டதா?பதில்:- இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அ.தி.மு.க. கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.கேள்வி:- வேதா இல்லத்தின் சாவி எப்போது உங்கள் கையில் கிடைக்க போகிறது?பதில்:- தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதை நாங்கள் செய்யவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =