வெ.4.90க்கு கோவிட் சுய பரிசோதனைக் கருவி

கோவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகளை இனிமேல் மிகக் குறைந்த விலையில் வெ4.90க்கு 99 ஸ்பீட்மார்ட் கடைகளில் வாங்கிக் கொள்ள முடியும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி நேற்று தெரிவித்தார். தொடக்கக் கட்டத்தில் வெ.39.90 ஆக இருந்த சுய பரிசோதனைக் கருவியின் விலையை வெ.4.90 க்கு குறைப்பதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது என்று அவர் குறிப்பிட்டார். சுய பரிசோதனைக் கருவியின் விலை தொடக்கத்தில் வெ.39.90 ஆக இருந்தது. ஆனால், அமைச்சு மேற்கொண்ட முயற்சியினால் அதன் உச்சவரம்பு விலை அதாவது அதிகப்பட்ச விலை வெ.19.90 ஆக குறைக்கப்பட்டது என்று அவர் சொன்னார். ஆயினும், குடிமக்கள் அனைவருக்கும் மலிவான விலைவில் அக்கருவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டது. அதன் விளைவாக இப்போது அதன் விலை வெ.4.90 ஆக குறைந்துள்ளது என்று அவர் கூறினார். பேராங்காடிகள் மற்றும் தொடர் வணிக வளாகங்களில் சுய பரிசோதனைக் கருவிகளை விற்பதற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. சில கடைகளில் உச்சவரம்பு விலைக்கு உட்பட்டு 6.90வெள்ளிக்கு அவை விற்கப்படுகின்றன. ஸ்பீட்மார்ட் கடைளைப் பின்பற்றி அக்கடைகளும் அதன் விலையை 4.90 வெள்ளிக்குக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என அலெக்சாண்டர் நந்தா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 15 =