வெ.10 லட்சம் வழங்கினாலும் பத்து தொகுதியை காலி செய்யமாட்டேன்

0

தமக்கு 10 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டாலும் தமது நாடாளுமன்றத் தொகுதியை தாம் காலி செய்யப் போவதில்லை என பிகேஆர் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெளிவுபடுத்தினார்.
கடந்தாண்டு 14ஆவது பொதுத்தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறும்படி நெருக்குதல் தந்து இந்த தொகையை வழங்க முன்வந்தபோது அதை தாம் நிராகரித்து விட்டதாக அவர் சொன்னார்.
இந்த தொகையினால் தாம் ஒருபோதும் மனமாறப்போவதில்லை என மிக இளைய நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்த நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். எனக்கு 10 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டாலும் என் தொகுதி மக்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகவேண்டும்” என அவர் சொன்னார்.
ஒருவர் பணத்திற்காக அரசியலில் நுழையவே கூடாது. மக்களுக்கு உதவத்தான் தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்தேன். பணம்தான் வேண்டும் என்று நான் நினைத்திருந்தால் இந்நேரம் விலகியிருப்பேன்” என பிரபாகரன் தெரிவித்தார்.
மேலும் இந்தத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் உதவித்தலைவருமான தியான் சுவாவின் ஆதரவு தமக்கு இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தியான் சுவா தேர்தலில் போட்டியிடலாம் என்று கடந்த நவம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தியான் சுவா பத்து தொகுதியில் பேட்டியிட வழிவிடும் வகையில் பிரபாகரன் பத்து தொகுதியை காலிசெய்ய வேண்டும் என 15 அரசு சாரா அமைப்புகள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =