
அரசாங்கத்தின் பரிசீலனைக்காக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைச் செம்மைப்படுத்த, தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு (மெடாக்) மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடனும் வர்த்தக சம்மேளனத்துடனும் நிதியமைச்சு (எம்ஓஎஃப்) மேலும் விவாதங்களை நடத்தும் என்று பிரதமர் கூறினார். நேற்றைய அக்கூட்டத்தில் முறைசாரா வர்த்தகர்கள் உட்பட குறு-சிறு-நடுத்தர நிறுவன (பி.எம்.கே.எஸ்) நிர்வாகிகளுடன் வெள்ளத்தின் பாதிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மலேசியப் புள்ளியியல் துறை (டிஓஎஸ்எம்), மலேசிய மலாய் வர்த்தக சபை (டிபிஎம்எம்), மலேசியச் சீன வர்த்தகம் மற்றும் தொழில்துறை (ஏசிசிசிஐஎம்), மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை (எம்ஏஐசிசிஐ) மற்றும் (மெடாக்) வெள்ளத்தின் பாதிப்பைப் பகிர்ந்து கொண்டன. வணிகங்கள் மீண்டும் எழுவதற்குப் பல நடவடிக்கைகளை அவர்கள் பரிந்துரைத்தனர். இழப்புகள், விளைவுகள் பற்றிய உண்மையான நிலவரத்தைப் பெற மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாமான் ஸ்ரீ மூடா மற்றும் தாமான் ஸ்ரீ நந்திங், ஹுலு லங்காட்டைச் சேர்ந்த இரண்டு தொழில்முனைவோரிடமிருந்தும் கூட்டத்தில் புகார்கள் கேட்கப்பட்டன. கூட்டத்திற்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.முறைசாரா வர்த்தகர்கள் உட்பட பிஎம்கேஎஸ் ஆபரேட்டர்களுக்கான வெள்ள நிவாரணத் திட்டம் இலக்கை எட்டுவதை உறுதி செய்வதற்காக, அடையாளம் காணப்பட்ட இடங்களுக்குப் தொடர் வருகைகள் நடத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்க, அரசாங்கம் முன்னர் 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மலேசிய குடும்ப வெள்ள நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியது. அதில் பண உதவி, வீடு பழுதுபார்ப்பு மற்றும் பொது வசதிகள் ஆகியவை அடங்கும்.