வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ஜொகூர் சுல்தான்

நேற்று முன்தினம், தற்காலிக மையத்தில் தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களைப் பார்வையிட மாட்சிமை தங்கிய ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கோத்தா திங்கியில் அமைந்துள்ள தொழிற்துறை கல்லூரி மண்டபத்திற்குச் சென்றார். குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாக அவர் கூறினார்.


“அவ்விடத்தில் ஏற்பாடுகள் முறையாக இருப்பதையும், நகரத்தின் உயர் அதிகாரி களால் எப்போதும் கண்காணிக் கப்படுவதையும் நான் கண்டேன். அதே நேரத்தில் தற்போதைய வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு மீட்புக் குழுக்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று சுல்தான் இப்ராஹிம் இப்னி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =