வெளிநாட்டுக்கு தப்பி ஓடவில்லை… அகமது மசூத் இன்னும் பஞ்ச்சீரிலேயே இருக்கிறார்

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றி இருந்தாலும் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் எதிர்ப்பு படையினர் கைவசம் இருந்தது. அதை கைப்பற்றுவதற்காக தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்கள். தற்போது பஞ்ச்சீர் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் இதனை எதிர்ப்பு படை மறுத்துள்ளது.

பஞ்ச்சீர் மாகாணத்தில் செயல்படும் எதிர்ப்பு படைக்கு தேசிய எதிர்ப்பு கூட்டணி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படையின் தலைவராக அகமது மசூத் செயல்பட்டு வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சலேவும் இந்த படையில் இடம்பெற்று இருக்கிறார். தலிபான்கள் பஞ்ச்சீர் பகுதிக்குள் நுழைந்ததும் அகமது மசூத், அமருல்லா சலே இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இருவரும் தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து துருக்கிக்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − two =