வெளிநாட்டில் பிறந்த மலேசிய பெண்களின் குழந்தைகளுக்கு தன்னிச்சையாக பிரஜாவுரிமை

0

மலேசியா பெண்மணிகளுக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு தன்னிச்சையாகவே பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாடு அமைச்சு கூறுகிறது. இதன் தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டவிதிகளை ஆராயுமாறு அந்த அமைச்சு உள்துறை அமைச்சை கேட்டுக் கொண்டது.
இது ஐக்கிய நாட்டு சபையின் நீண்டநாள் நீடித்திருக்கும் மேம்பாட்டு குறிக்கோள்களுக்கு ஏற்ப இந்தக் கோரிக்கை இருக்கிறது என்று துணையமைச்சர் ஹன்னா இயோ நேற்று கூறினார்.
சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உள்துறை அமைச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். குடும்பங்களைப்பாதிக்கும் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக பிள்ளைகளின் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியமாகும் என்று அவர் கூறினார். இரு பாலருக்கும் சமமான பிரஜாவுரிமை அந்தஸ்து தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.
பிரஜாவுரிமை பற்றிய நான்கு அம்சங்களையும் பரிசீலினை செய்யுமாறு நாங்கள் உள்துறை அமைச்சை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =