வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள் அனுமதி பெறத் தேவையில்லை!

0

மேற்கல்வியைத் தொடரும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்ல விருக்கும் மாணவர்கள் உட்பட
புதிதாக தங்களின் மேற்கல்வியைத் தொடங்க விருக்கும் மலேசிய மாணவர்கள் குடிநுழைவுத் துறையின் அனுமதி யைப் பெறத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் மாணவர் அடையாள அட்டை, மற்றும் உயர் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதி கடிதம் போன்ற ஆதாரங் களை முறையே சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டார்.
தங்களின் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது உடன் செல்ல விரும்பும் பெற்றோர்கள், இரண்டு பேர் மட்டுமே
செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கு முன்னர் இருந்ததுபோல,
தங்களின் குடும்பத்தை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை என்றார். நடைபெற்ற பி.கே.பி.பி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில்
சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்கள்
மற்றும் அவர்களுடன் மலேசியாவிற்குத் திரும்புபவர்கள்
14 நாட்கள் கட்டாய தனிமைப் படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − ten =