வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் இரண்டாவது கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

0

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி இரண்டு வார காலம் வீடுகளில் சுயமாக தனிமைப் படுத்திக்கொள்ளும் நபர்கள் இரண்டாவது கோவிட் – 19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத வர்களை மேல் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளுவர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறினார்.
தனிமைப்படுத்தப்படும் 13ஆவது நாளில் அவர்கள் அப்பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும். எனினும் ஏறக்குறைய வெளிநாடுகளி லிருந்து நாடு திரும்பிய 1,400 நபர்கள் இன்னும் அந்த இரண்டாவது கோவிட் – 19 பரிசோதனையை மேற் கொள்ள வில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து மூத்த அமைச்சர் இஸ்மாயில் இந்த எச்ச ரிக்கையை விடுத்தார்.
அந்த 1,400 நபர்களும் பிடிவாதமாக இருக்கின்றனர். போலீஸ்சாரை அனுப்பி அவர் களை கண்டறிந்து இரண்டாவது கோவிட் – 19 பரிசோதனைக்கு அனுப்பி வைப்போம்.
அவர்களுக்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் போலீசாரின் வருகைக் காக கார்த்திருக்கலாம் அல்லது சுயமாகவே நிர்ணயிக்கப்பட்ட கிளினிக்குகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள லாம் என்றும் புத்ரா ஜெயாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இருநாட்களுக்கு முன்பு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள 1.472 நபர்கள் இன்னும் இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறியிருந்தார். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 13 நாளில் இப்பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =