வெற்றியோ தோல்வியோ தேசிய முன்னணியுடன் இருப்போம் -கிம்மா தேசியத் தலைவர்


தேசிய முன்னணியுடன் கடந்த 40 ஆண்டு காலமாக பயணிக்கும் கிம்மா கட்சிக்கு வரும் பொதுத் தேர்தலில் சீட்டுக் கொடுங்கள் என்று நெருக்கடி கொடுக்க மாட்டோம். மாறாக, வெற்றியோ தோல்வியோ அம்னோவுடன் பயணிப்போம் என்று கிம்மா கட்சியின் தேசியத் தலைவர், டத்தோஸ்ரீ செனட்டர் சைட் இப்ராஹிம் காதீர் உறுதியாக தெரிவித்தார்.
தேசிய முன்னணியே எங்களுக்கு சீட்டுக் கொடுத்தால் ஏற்று போட்டியிடுவோம். எங்களிடமும் சில சேவையாளர்கள் இருக்கின்றனர். அவர்களை வேட்பாளராக அறிவித்தால் வெற்றி கிடைக்கலாம். ஆனால், எங்களுக்கு கண்டிப்பாக சீட்டுக் கொடுங்கள் என்று போராட மாட்டோம் என்று கிம்மாவின் ஏற்பாட்டில் பேராக் இந்திய முஸ்லிம்களுக்கு ஈகைப் பெருநாள் உதவிநிதி கொடுக்கும் நிகழ்வில் அவர் கூறினார்.
முன்பு கிம்மாவிற்கு பிரச்சினை ஏற்பட்ட போது, உதவி செய்தது தே.மு.தான். அப்படியிருக்க, இப்பொழுது தே.மு.விற்கு ஆதரவு வேண்டும். ஆதலால், நாங்கள் தொடர்ந்து கூடவே இருப்போம். தே.மு.வின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதில் முழு மூச்சாக களமிறங்குவோம்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய முஸ்லிம்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் அதற்கு கிம்மாதான் தீர்வு காணும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 6 =