வெங்காயம் வாங்கினால் டி-சர்ட் இலவசம்

0

கேரள மாநிலம் கொல்லம் கலெக்டர் அலுவலகம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் பிரகாசன் (வயது 32). வெங்காய விலை உயர்வையொட்டி சலுவை வழங்க உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்தார்.

400 ரூபாய் கொடுத்து 5 கிலோ பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டி-சர்ட் வழங்கப்படும் என்று அதில் கூறியிருந்தார். அதன்படி 2 நாட்களில் 1500 கிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்து அதற்கு உரிய டி-சர்ட்களை இலவசமாக வழங்கினார்.

விலை உயரும்போது வாடிக்கையாளர்கள் மனதை சாந்தப்படுத்த சில இலவச பொருட்களை வழங்கினால் விற்பனையும் அதிகரிக்கும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கடை உரிமையாளர் பிரகாசன் தெரிவித்தார்.

இதற்கு முன்பு லாட்டரி சீட்டு, கூடுதல் காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விற்பனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. * * * மளிகை கடை உரிமையாளர் பிரகாசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + ten =