வுஹான் நிதிக்கு சபா வெ.20 லட்சம் திரட்டியது

0

வுஹான் நிதிக்காக சில அரசு சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து சபா அரசாங்கம் சுமார் 20 லட்சம் வெள்ளியை திரட்டியுள்ள தாக சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தெரிவித்தார்.

கொடூர கொரோனா வைரஸ் பரவி சிரமத்தை எதிர்நோக்கி வரும் சீனாவிற்கு ஒற்றுமைச் சின்னமாக இந்த நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சீனாவில் வைரஸ் சம்பவத்தால் அந்நாடு எதிர்நோக்கி வரும் நிலை குறித்து சபா அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த கிழக்காசிய நாட்டிற்கும் சபாவிற்குமிடையிலான சுமுகமான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என தாம் விரும்புவதாக அவர் சொன்னார். சீனாவின் சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைக்கு சபா ஒரு முக்கிய மையமாகத் திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 4 =