வுஹானிலிருந்து வந்த 14 பேர் நாட்டுக்குள் நுழையத் தடை

சீனா, வுஹான் மாநகரில் இருந்து நாட்டுக்குள் நுழையவிருந்த சீன நாட்டவர்கள் 14 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கிருந்து விரைவாக வெளியேற உத்தரவிடப்பட்டதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார். அவர்கள் அங்கிருந்து வெளி யேறி விட்டதாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கோரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகப் பரவியதை அடுத்து, ஜனவரி 27ஆம் தேதி, வுஹான், ஹுபேய் மாவட்டத்தில் இருக்கும் சீன நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை அரசு நிறுத்தியுள்ளது. இந்நோய் முற்றாக அழிக்கப் பட்டால், மீண்டும் விசா வழங்கும் நடவடிக்கை தொடங்கப்படும்.

கொரோனா வைரஸைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் கீழ் அந்த 14 பேரும் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப் படவில்லை. அவர்கள் எந்நாட்டவர்களாக இருந்தபோதும், வுஹான், ஹுபேய் ஆகிய இடங்களில் இருந்து வருவதாகக் கடப்பிதழில் குறிப்பிடப் பட்டிருந்தால் அவர்கள் நாட்டினுள் நுழைய அனுமதிக்கபட மாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 5 =